புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (11:41 IST)

பிளஸ்2 மாணவிகளை குறிவைத்து சில்மிஷம்: கேரள வாலிபரை அமுக்கிய போலீஸ்

குமுளியில் பள்ளிச் சிறுமிகளை குறிவைத்து அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
கேரள மாநிலம் குமுளியில் ஜார்ஜ் அப்புகுட்டன் என்பவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளை குறிவைத்து அவர்களை தன் காதல் வலையில் சிக்க வைப்பான். பின்னர் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மாணவிகளை சீரழிப்பான். இதையே அவன் வாடிக்கையாக வைத்துள்ளான்.
 
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், போலீஸார் ஜார்ஜ் அப்புகுட்டனை கைது செய்தனர். இவனை மாதிரியான ஆட்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.