திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (15:35 IST)

காதல் விவகாரம்! கோவையில் கல்லூரி மாணவன் குத்திக் கொலை! சக மாணவன் கைது

கோவையில் காதல் விவகாரத்தில் தொடர்பாக கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


 
கோவை உக்கடம் அடுத்த கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் முரளீதரன். கோவை நவ இந்தியா பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வந்துள்ளார்.அவர் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக மாணவனான கெம்பட்டி காலணி பகுதியை சேர்ந்த நந்தகோபால் என்பவரது மகனான பாலாஜி முரளீதரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த  நிலையில் நேற்றிரவு முரளீதரன் அப்பகுதியிலுள்ள மைதானம் அருகே நின்றிருந்த போது அங்கு வந்த பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளீதரனை குத்தி விட்டு தப்பினார்.  இதனால் அதே இடத்தில் மயங்கி விழுந்த முரளீதரனை சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
 
இதையடுத்து வழக்கு பதிவு செய்த கடைவீதி காவல்நிலைய போலீசார் ,  முரளீதரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து மாணவன் பாலாஜியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.