செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (20:21 IST)

கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!

கோயம்பேடு சந்தையில் 9 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு!
சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களது வயது முறையே  36, 71,19 ஆகும். இந்த மூவரையும் சேர்த்து பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கோயம்பேடு பூக்கடையில் மட்டுமின்றி அண்ணா பழக்கடையில் ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 3 ஆண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
 
கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் சமூக விலகலை கடைபிடிப்பது இல்லை என்றும், இதன் பாதிப்பு இன்னும் இரண்டு வாரங்கள் கழித்தே தெரியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட்டை இரண்டு நாட்கள் மூடி, முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது