1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (10:07 IST)

கோயம்பேடு மார்க்கெட்ட பூட்டி பெரிய பூட்டா போட வேண்டியது தான்..?

கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 
 
கோயம்பேடு பகுதியில் நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் உடனடியாக தமிழக அரசு கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. 
 
மேலும் கோயம்பேட்டில் காய்கறி சில்லரை வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்றும், அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே சில்லரை வியாபாரிகள் காய்கறி வாங்கி செல்ல அனுமதி என்றும் அறிவித்திருந்தது. 
 
மேலும் கோயம்பெடு மார்க்கெட்டில்‌ இயங்கி வந்த பூ மார்க்கெட்‌ மற்றும்‌ பழங்கள்‌ அங்காடி நாளை முதல்‌ மாதவரம்‌ பேருந்து நிலையத்தில்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் நேற்று வரை மொத்தம் 7 பேர் கொரோனாவால் கோயம்பேடு சந்தையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 
 
எனவே, கோயம்பேடு சந்தையில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.