1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:19 IST)

முந்தியடிக்கும் மக்கள்… 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு!

இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன என தகவல்.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இருந்தாலும் பொதுமக்கள் தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மின் கட்டண வசூல் மையங்களில் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5 லட்சம் மின் இணைப்புகள் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்…

இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி நேற்று மட்டும் 2.28 லட்சம் இணைப்புகளும், ஆனலைன் மூலம் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

Edited by: Sugapriya Prakash