திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (09:34 IST)

மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு !

மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
எனவே, நாடு முழுவதும் கொரோனாவை விரைந்து கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநிலங்களுக்கு மேலும் கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதேபோல், மாநிலங்களிடம் தற்போதைய நிலவரப்படி 1.33 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.