1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (08:06 IST)

தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு: கடலூரில் 8 பேர் பாதிப்பு

தமிழகத்தின் பல பகுதியிலிருந்து தொழிலாளர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து லாரிகளிலும் வேன்களிலும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை கொண்டுவந்து கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’பேனிக் பையிங்’காரணமாக ஒரே நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி பழங்கள் ஆகியவற்றை முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள். இதனால் தனிமனித இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது 
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்தவர்களால் தமிழகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நேற்று அரியலூரில் 19 பேர் உள்பட மொத்தம் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கோயம்பேடு மார்க்கெட் காரணமாக கொரோனா பரவியுள்ளது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த 11 வயது சிறுமி உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் கோயம்பேடு சென்று வந்ததன் காரணமாகவே கொரோனா பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கடலூர் சென்றவர்கள் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இவர்களில் 550 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதும் இந்த முடிவுகள் வந்த பின்னரே கடலூரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை உயருமா? என்பது தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. தற்போது கடலூரில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது