ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (18:35 IST)

ஒரே நேரத்தில் மோதிக் கொண்ட 7 வாகனங்கள் – திருச்சி நெடுஞ்சாலையில் பயங்கரம்

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே சமயத்தில் 7 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே வேகமாக வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. அப்போது முதலாவதாக சென்ற இரு கார்கள் மோதி கொண்டு விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களும் கட்டுபடுத்தமுடியாத வேகத்தில் வந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில நாட்களாகவே விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்கு உள்ளாகியிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.