ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:15 IST)

அத்திவரதர் தரிசனம் - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் 10 நாட்களே மீதம் இருப்பதால் கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தை சமாளிக்க காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

40 வருடங்களுக்கு ஒருமுரை நடைபெறும் அற்புத நிகழ்வான அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் லட்சக்கணக்கில் மக்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்டு 1 முதல் அத்திவரதர் நின்ற திருகோலத்தில் காட்சியளித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவம் ஆகஸ்டு 17 அன்று நிறைவடைய இருக்கிறது.

அதனால் தரிசனத்துக்காக லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்டு 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.