புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:27 IST)

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சென்னை உள்பட ஒரு சில வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஆனால் மற்ற மாவட்டங்களில் சரியான தேதியில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது