வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 21 ஏப்ரல் 2022 (17:34 IST)

7 பேர் விடுதலை கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்பு: தமிழக அரசு

7 tamils
7 பேர் விடுதலை குறித்த கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் 7 தமிழர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இதுகுறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
ஜனவரி 27 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அந்த தகவலில் தமிழக அரசு தெரிவித்துள்ளது