செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 2 மே 2020 (09:19 IST)

கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பிய 7 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூருக்கு திரும்பிய 7 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களது வயது முறையே  36, 71,19 ஆகும். இந்த மூவரையும் சேர்த்து பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இப்போது அங்குள்ள கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளி ஒருவருக்கு கொரோனா இருப்பது அரியலூரில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று கடலூரில் 7 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.