1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:55 IST)

12 வயது சிறுமியிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டு தாத்தா ! – பாய்ந்தது போக்ஸோ சட்டம் !

நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறி அவரை தகாத இடங்களில் தொட்ட நீலகண்டன் எனும் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகார்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர் 65 வயதான நீலகண்டன். இவரின் பக்கத்து வீட்டில் இருக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இரு குடும்பத்தினரும் நண்பர்கள் என்பதால் அந்த சிறுமி அடிக்கடி நீலகண்டனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்றும் வழக்கம்போல அந்த சிறுமி நீலகண்டனின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கே நீலகண்டன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் சிறுமியை அத்துமீறி தொட ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து ஓடிச்சென்று தன் பெற்றோரிடம் நடந்தது பற்றிக் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காவலர்கள் நீலகண்டனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.