1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (17:12 IST)

தீயில் எரிந்த வீடு ... பூனைக்குட்டியுடன் கதறி அழுத முதியவர் ...பரவலாகும் வீடியோ

துருக்கிஸ்தான் நாட்டைச்   சேர்ந்த 83 வயது முதியவர் அலி மெஸி. இவர் அங்குள்ள போலு என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது வீடு சமீபத்தில் தீயில் எரிந்து நாசமானது. அப்போது தனது எரிந்து சாம்பலான வீட்டுக்கு முன் தான் செல்லமாக வளர்த்த பூனையுடன் நின்று அழுகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதனால்  அந்த கிராமத்தை சேர்ந்தவர்களின் உதவியாலும் முடூர்னு சமூக சேவை நிறுவனத்தாலும், சமூகசேவை அமைபினாலும், போலூ கவர்னர் சிப் போன்றவற்றாலும் முதியவருக்கு ஒரு புதிய வீடு கட்ட தீர்மானிக்கப்பட்டது.
 
இப்போது அங்கு குளிர்காலம் என்பதால், மெஸி தனது மகன் வீட்டுக்கு செல்லத் தீர்மானித்தார். ஆனால் தினமும் தான்வளர்த்து வந்த பூனைக்குட்டிகளை பார்த்து வந்தார்.
 
இந்நிலையில் மெசியும் பூனையும் இருக்கும்  சோகமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உலக அளவில் கவனம் பெற்றது. அதனால் பலரும் அவருக்கு உதவி செய்து புதிய வீட்டைக் கட்டிக்கொடுத்தனர்.  தற்போது முதியவர் தனது பூனைக்குட்டிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.