1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (23:20 IST)

104 வயது முதியவர் இறந்த அடுத்த நிமிடம் இறந்த 100 வயது மனைவி!

சாவிலும் இணைபிரியாத ஜோடிகள் என்று உலகில் மிகச்சிலரே இருந்து வரும் நிலையில் அப்படி ஒரு ஜோடி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்துள்ள அதிசய சம்பவம் இன்று நடந்துள்ளது
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குப்பகுடி என்ற பகுதியை சேர்ந்த 104 வயது வெற்றிவேல் என்ற முதியவர் இன்று காலை உயிரிழந்தார். இந்த நிலையில் கணவர் வெற்றிவேல் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடமே அந்த அதிர்ச்சியில் அவரது 100 வயது மனைவி பிச்சாயி என்பவரும் மாரடைப்பில் மரணமடைந்தார். 
 
இதனையடுத்து மரணத்திலும் இணை பிரியாத இந்த தம்பதிக்கு அந்த பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருவரையும் ஒன்றாக தகனம் செய்தனர். 100 வயதை கடந்த இந்த தம்பதிக்கு 6 பிள்ளைகள், 23 பேரன்கள், கொள்ளு பேரன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது