திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (19:00 IST)

2 நாட்களில் 630 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர பதிவு

இரண்டே நாட்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 630 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் மருத்துவ படிப்பு படிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப் பித்தனர். இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக இரண்டு நாட்களில் 630 மாணவர்கள் பதிவு செய்திருப்பதாகவும் அதில் 288 மாணவர்கள் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர் என்றும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது