1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (16:00 IST)

தொலைக்காட்சி சீரியல் நடிகைக்கு விபத்து – மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இந்தி சீரியல் நடிகையான ஆன்சல் குராணாவுக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிந்தி டிவி நடிகையான ஆன்சல் குரானா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நின்று கொண்டிருந்த தன் மீது கார் காரர் ஒருவர் மோதிவிட்ட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நடக்க 15 நாட்களாவது ஆகும் என மருத்துவர்கள் சொல்லியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர் சீக்கிரம் குணமாகி வர தங்கள் ஆறுதல்களை சொல்லி வருகின்றனர்.