1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (07:51 IST)

அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும்: ப.சிதம்பரம்

Chidambaram
சமீபத்தில் மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை கொண்டு வந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
ஒரு குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே இராணுவத்தில் வேலை செய்ய முடியும் என்ற நிபந்தனையை கொண்ட இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் திட்டம் குறித்து கூறிய போது ’மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான ராணுவ ஆட்சேர்ப்பு முறை என்பது நாட்டின் பாதுகாப்பை?யாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் அக்னிபாத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் சிறப்பான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்