1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:07 IST)

கலைஞர் நினைவு நாணயம்.. ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை..!

சமீபத்தில் கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்பட்ட நிலையில் இந்த நாணயம் அண்ணா அறிவாலயத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் 500 நாணயங்கள் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 18ஆம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் என்பதும் இந்த நாணயம் தற்போது பத்தாயிரம் ரூபாய்க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.

அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த நாணயத்தை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. மொத்தம் ஆயிரம் நாணயங்கள் இருந்ததாகவும் நேற்று மட்டும் ஒரே நாளில் 500 நாணயங்கள் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நாணயம் தோழமை கட்சி தலைவர்களுக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது என்றும் மற்றவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தோழமைக் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், விஐபிகள் என பலரும் இந்த நாணயத்தை ஆர்வமாக வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளைக்குள் அனைத்து நாணயங்களும் விற்பனை ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva