செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (10:27 IST)

மாந்தீரிகத்துக்காக தேவாங்குகளை கடத்திய நபர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 5 தேவாங்குகளை கடத்திய நபர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள விலங்குகளில் தேவாங்குகளும் ஒன்று. இவை இரவில் இரைதேடி அலையும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவற்றை பயன்படுத்தி ஊக்கமருந்துகள் தயாரிபபதாகவும், மாந்ந்தீரிகம் செய்யப்படுவதாகம் மூட நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

இந்நிலையில் 5 தேவாங்குகளை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்தி குளம் பகுதியில் கனகராஜ் மற்றும் கொம்புத்துறை ஆகிய இருவரை போலிஸார் கைது செய்தனர். இது சம்மந்தமாக போலிஸார் இப்போது விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.