செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (10:26 IST)

கண்ணையா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸில் ஐக்கியம்!

வட இந்தியாவில் பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கன்னையா குமாரும் ஜிக்னேஷ் மேவானியும் தங்களை காங்கிரஸில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

குஜராத்தில் தலித்திய செயல்பாட்டாளராக செயல்பட்டு சுயேட்சை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிக்னேஷ் மேவானி. அதே போல சிபிஎம் கட்சியின் மாணவரணியில் இருந்தவர் கண்ணையா குமார். இவர்கள் தங்கள் தொடர் செயல்பாடுகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று காங்கிரஸில் ஐக்கியம் ஆகியுள்ளனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னையா குமார் ‘காங்கிரஸ் எனும் கப்பல் காப்பாற்றப்பட்டால் இளைஞர்களின் கனவுகள்,  மகாத்மா காந்தியின் ஒற்றுமை,  பகத்சிங்கின் துணிவு, அம்பேத்கரின் சமத்துவ எண்ணம் ஆகியவையும் காக்கப்படும்.  இதனால்தான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.