1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:54 IST)

இலங்கை சிறையில் இருந்து 47 மீனவர்கள் விடுதலை: சென்னை வந்தடைந்தனர்!

கடந்த 2021 டிசம்பா் மாதம் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடைச் சேர்ந்த 47 மீனவா்கள் அந்நாட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாடு திரும்பினர்
 
சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர் என்றும், அதன்பின் தனி வாகனங்களில் மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
 
 ஜனவரி 25ம் தேதியே இலங்கை சிறையில் இருந்து வெளியான நிலையிலும், உணவு தண்ணீர் என அடிப்படை வசதிகள் செய்து தராமல் அவமதித்ததாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ராஜ மாணிக்கம் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.