வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:28 IST)

சி எஸ் கே வில் இலங்கை வீரர்… கடுப்பான ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான மஹீத் தீக்‌ஷனாவை எடுத்துள்ளது குறித்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் சென்னை ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. அவர்களின் விருப்பத்துக்குரிய வீரர்களான ரெய்னா, டு பிளஸ்சி ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இது குறித்து சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த வீர்ர மஹீத் தீக்‌ஷனாவை எடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ரசிகர்கள் #Boycottchennaisuperkings என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்புக்கு ஆதரவாக இலங்கை வீர்ரகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து எதிர்ப்புகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.