திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (07:54 IST)

சொகுசு வாழ்க்கைக்காக 40 கோடி மோசடி; ரியல் எஸ்டேட் பிரோக்கர் கைது

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலம் வாங்கித்தருவதாக கூறி 40 கோடி ரூபாய் மோசடி செய்த ரியல் எஸ்டேட் பிரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

கேளம்பாக்கம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் வெங்கடரமணன்(57) ரியல் எஸ்டேட் புரோக்கர். இவர் சென்னையை சேர்ந்த பலரிடம் நிலம் வாங்கித் தருவதாக கூறி 40 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளார். பணத்தை ஏமாந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மஹாராஸ்டிராவில் பதுங்கியிருந்த வெஙட்ராமனை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மத்திய குற்றப்பிறிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
 
இதனையடுத்து வெங்கட்ராமன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஆழ்வார்பேட்டையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த போது பிரதீப்குமார் என்பவரிடம் 35 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி 1.70 கோடி ரூபாய் மோசடி செய்தேன். அதேபோல் கூட்டாளிகளுடன் சேர்ந்து கே.ஆர்.வி., பிராபர்ட்டிஸ் என்ற நிறுவனத்தினருக்கு நிலம் வாங்கி தருவதாக, 5.23 கோடி ரூபாய் மோசடி செய்தேன். கிரண் வர்கீஸ் தாமஸ் என்பவருக்கு, பெரும்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக கூறி, 50 கோடி ரூபாய் வாங்கினேன்.ஆனால் அவருக்கு 17.54 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.99 ஏக்கர் நிலத்தை மட்டுமே வாங்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள 32.46 கோடியை மோசடி செய்தேன். இங்கு இருந்தால் போலீஸில் மாட்டிக்கொள்வேன் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஸ்டிராவுக்கு தப்பிச்சென்றேன். 
 
திருடிய பணத்தில் சொந்தமாக, ஹெலிகாப்டர் வாங்கி இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு எனது கூட்டாளிகளை போலீஸார் கைது செய்தனர். இதனால் மும்பை, கோவா, ஜெய்ப்பூர் என பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினேன் என வெஙட்ராமன் கூறியுள்ளார். மக்களின் பணத்தை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை நடத்திய இந்த அயோக்கியனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.