திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (11:51 IST)

25 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்திய பெண் கைது

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவுக்கு ரூ.25 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அவரை மத்திய போதை தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி நெடும்பாஞ்சேரியில் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய போதை தடுப்பு அதிகாரிகள், விமானத்தில் வந்திறங்கிய ஒரு பெண்ணின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவர் வைத்திருந்த சூட்கேசை சோதனை செய்தபோது அதில் 4ž கிலோ கொக்கைன் போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணையை துரிதப்படுத்தினர்.
 
விசாரணையில் அந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டிகாய் ஜோநாடி சைன் (வயது 36) என்பதும் ஒரு கிலோ கொக்கைனுக்கு ரூ.3 லட்சம் கமி‌ஷன் என்ற அடிப்படையில் கொக்கைனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.