வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:30 IST)

ஓ எம் ஆர் சாலையில் நான்கு சுங்கசாவடிகளில் வசூல் நிறுத்தம்! சட்டசபையில் அறிவிப்பு!

சென்னை ஓஎம்ஆர் ராஜீவ்காந்தி சாலையில் நான்கு இடங்களில் வசூலிக்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணம் இந்த மாத இறுதியோடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓ எம் ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் இருக்கும் நான்கு சுங்கசாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதியோடு கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்படும் என சட்டசபையில் இன்று அமைச்சர் எ வ வேலு அறிவித்துள்ளார்.