1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (07:06 IST)

இன்று முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம்: தமிழக அரசு அறிவிப்பு!

இன்று முதல் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் தடுப்பூசி மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் இன்று முதல் இயங்கும் என்றும் தற்போது செலுத்தாதவர்கள் இதனை பயன்படுத்தி எப்பொழுது வேண்டுமானாலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் உள்ள அனைவரையுமே தடுப்பூசி செலுத்த அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் என்றும் எனவே 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது