வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (07:54 IST)

ஜீன்ஸ் பேண்டில் தங்கம் கடத்திய இருவர் அதிரடி கைது: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

துபாயில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில் ஜீன்ஸ் பேண்டில் 38 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று கடந்த புதன் கிழமை வந்தது. இந்த நிலையில் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தபோது தஞ்சையை சேர்ந்த கொளஞ்சி மற்றும் முருகன் சந்திரன் ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது
 
இதனையடுத்து அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் பெல்ட் உள்ள பகுதியில் பாலிதீன் கவர்களில் தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் சேர்ந்து கடத்திய முக்கால் கிலோ என்றும், அந்த தங்கத்தின் மதிப்பில் சுமார் 38 லட்ச ரூபாய் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
 
இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி விசாரணைக்குப்பின் கைதுசெய்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது