வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (10:05 IST)

கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காதலன்! – ஆபத்தான நிலையில் பள்ளி மாணவி!

நாமக்கல் அருகே பள்ளி மாணவியின் கருவை கலைக்க மாத்திரை கொடுத்த காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெள்ளக்கள் பட்டியை சேர்ந்தவர் வசந்த். கல்லூரி மாணவரான வசந்த் காட்டூர் பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பம் ஆனதால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து வசந்திடம் மாணவி கூற அவர் கருவை கலைப்பதற்காக மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட மாணவி உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவி கருக்கலைப்புக்காக மாத்திரை சாப்பிட்ட விவகாரம் வெளியே தெரியவர உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீஸ் கல்லூரி மாணவர் வசந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கருக்கலைக்க மாத்திரை சாப்பிட்டு மாணவி உயிருக்கு போராடி வரும் சம்பவம் ராசிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.