1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (08:39 IST)

காதலன் முன் பள்ளி மாணவி 6 பேரால் பலாத்காரம்: அதிர்ச்சி சம்பவம்

கோவையில் பள்ளி மாணவி ஒருவரை அவரது காதலன் கண் முன்னே 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை சீரானைக்கன்பாளையம் என்ற பகுதியில் உள்ள பூங்கா ஒன்றுக்கு கடந்த 26ஆம் தேதி தனது காதலனுடன் பள்ளி மாணவி சென்று அங்கு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.
 
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து உதைத்துவிட்டு பள்ளி மாணவியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பாலியல் பலாத்காரத்தை அந்த கும்பலில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்ததாகவும் தலைமறைவாகவுள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது