திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (17:08 IST)

மேலும் 33 பேருக்கு கொரோனா... சென்னை ஐஐடியில் தினம் உயரும் எண்ணிக்கை!

இன்று ஒரே நாளில் சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல். 

 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 4,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இதுவரை 2,729 மாதிரிகளின் சோதனை முடிவுகள் வந்துள்ளன.
 
இந்நிலையில் சென்னை ஐஐடியில் உள்ள அனைவருக்கும் கொரனோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடி சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதாகவும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.