செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (21:39 IST)

விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு

Coimbatore
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில்  பேனர் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் பெரிய விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இந்த விளம்பரப் பலகை விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  அதில், விளம்பர பலகை கட்டும்போது இந்த பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டதாக போலீஸார் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

ராட்சத பேனர் கட்டும் பணியின்போது பேனர் கட்டும் டவர் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.