வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:54 IST)

மூன்று வயது குழந்தை மர்ம மரணம் – இல்லற வாழக்கைக்கு இடையூறாக இருந்ததால் தாயே கொலை செய்த சம்பவம் !

சென்னையில் தங்கள் இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையைக் கொலை செய்துள்ளனர் ஒரு தம்பதியினர்.


 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் பவானி ஆகிய தம்பதிகளுக்கு யாழினி என்ற மூன்று வயது மகளும் ஒருக் கைக்குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் குழந்தைகள் இருவரும் பவானியோடு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பவானிக்கு ஆசிப் என்ற இளைஞரோடு காதல் ஏற்பட அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். குழந்தைகளும் தம்பதிகளோடு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென நேற்று குழந்தை யாழினி இறந்துவிட்டதாக தந்தை ரமேஷ்க்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையைப் பார்க்க வந்த அவர் குழந்தையின் மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சொல்லவே போலிஸார் பவானி மற்றும் ஆசிப்பிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

போலிஸ் விசாரணையில் இல்லற வாழ்க்கைக்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.