செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (18:08 IST)

சிறுமியை 7- வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்...

அன்றாடமும் உலகைச் சுற்றி சில விசித்திரமான சம்பவங்களும், பிரச்சனைகளும் நடந்துவருகின்றன. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒரு கொடூரன், தன் நண்பரின் 3 வது மகளை 7 வது மாடியில் இருந்து தூக்கி வீசியெறிந்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள    கொலாபா என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் 7 வது மாடியில்  வசித்து வருபவர் அனில் சுனானி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்
இவரது நண்பரின் 3வயது மகள் சனயா  மற்றும் இரு குழந்தைகள் அந்த தளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது,  திடீரென்று ஆவேசம் கொண்டவராக மாறிய அனில், சனயாவை 7வது மாடியில் இருந்து வெளியில் தூக்கி வீசினார்.

இதில் கீழே விழுந்து அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து குற்றவாளி அனிலைக் கைது செய்த போலீஸார், இந்த கொடூர செயலை ஏன் செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.