மனைவியுடன் கள்ளத்தொடர்பு... சொத்தை பறிக்க மிரட்டல்.. தொழிலாளி கதறல்...

karur
anandakumar| Last Updated: திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:56 IST)
மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர் தனது சொத்துக்களை எழுதி கொடுக்க கொலை மிரட்டல் விடுத்ததால், பாதிக்கப்பட்ட டெக்ஸ் தொழிலாளி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாந்தோணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூங்காநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் வயது 54.தனியார் டெக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி கவிதா வயது 40. பதினெட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். திருமணத்தின்போது தனது சொத்துக்களில் பாதி தனது மனைவியின் பெயரில் எழுதி வைத்திருந்தார். மனைவி கவிதா இதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவருகிறார். இந்நிலையில் சிவசங்கரன் மீதி உள்ள சொத்துக்களையும் மனைவி பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, தாந்தோணி காவல்நிலையம் போன்றவற்றில் புகார் அளித்திருந்தார் .இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிவசுப்ரமணியம் மறைத்து எடுத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் .

காவல் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் அவரை தடுத்து ,இது தொடர்பாக விசாரணை நடத்த தாந்தோணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதில் மேலும் படிக்கவும் :