1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (20:32 IST)

முத்தம் கொடுக்காத காதலியை... படுகொலை செய்த காதலன்...

மத்திய பிரதேச மாநிலம் , ஜாபல் பூர் என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு மாணவி (18). அவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை தன் ஆண் நண்பருடன் ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி, வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. அதனால் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவியை குறித்து விசாரித்தனர். அப்போது , ராமன் சிங் என்ற ஒரு இளைஞருடன் மாணவி, காட்டுப்பகுதிக்குச் சென்றது தெரியவந்தது.
 
இதனையடுத்து போலீஸார் அந்த இளைஞனை பிடித்து, விசாரித்தபோது  மாணவியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுவிட்டான். அதில், காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். முத்தம் கொடுக்கச் சொல்லி அவரை வற்புறுத்தியுள்ளான். ஆனால் மாணவி அதற்கு சம்மதிக்க மறுக்கவே, அவரைக் கீழேதள்ளி விட்டுள்ளான். இதில் மாணவியின் தலை கல்லில் பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது.
 
மேலும் , இதுகுறித்து போலீஸார் இளைஞனிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.