ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: புதன், 12 நவம்பர் 2025 (12:44 IST)

போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி!.. சிவகங்கையில் சோகம்!....

போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி!.. சிவகங்கையில் சோகம்!....
சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


 
மதுரை மாவட்டம் சிட்டாப்பட்டியில் வசித்து வந்தவர் பிரசாத்(25). இவரின் மனைவி சத்யா(21) மற்றும் இரண்டு வயது மகன் அஸ்வின் ஆகிய மூன்று பேரும் நேற்று ஒரு இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்களோடு ஈஸ்வரி என்கிற உறவினரும் பயணித்திருக்கிறார்.
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் சக்குடி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த ராமபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி இருக்கிறது. அதில் துக்கி வீசப்பட்டு பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சத்யா, அவரின் 2 வயது அஸ்வின் மற்றும் ஈஸ்வரியை அங்கிருந்தவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சத்யாவும், அஸ்வினும் உயிரிழந்தனர்.
 
வாகனம் மோதியதும் போலீஸ் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். தற்போது இறந்த 3 பேர் உடலையும் மறுத்து மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீசார் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறார்கள், அவர்கள் மது அருந்தியிருந்தர்கள், அவர்களை உடனே கைது செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் உடலை வாங்க மாட்டோம்’ என அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
 
போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். 
ஈஸ்வரி பலத்த காயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.