ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 5 நவம்பர் 2025 (11:35 IST)

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

Kenducky flight crash

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறிய வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மாகாணத்தின் லூயிஸ்விலே விமான நிலையத்தில் இருந்து UPS Airlines சரக்கு விமானம் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு ஹவாய் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால் இறக்கையில் தீப்பிடித்தது. 

 

விமானத்தை மீண்டும் தரையிறக்க முயன்ற நிலையில் அது ரன்வேயை தாண்டி ஓடி மோதி வெடித்துச் சிதறி பெரும் விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் விண்ணை முட்டிய நிலையில், பல மீட்டர் தூரத்திற்கு தீ பரவியிருந்தது. இந்த சம்பவத்தில் விமானத்தை இயக்கிய பைலட்கள் உட்பட விமானத்தில் இருந்த 3 பேருமே உடல் கருகி பலியானார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை அளித்து வருகிறது.

 

Edit by Prasanth.K