புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (10:19 IST)

மனைவியால் தம்பியிடம் தோற்ற கணவன் – திருப்பூர் உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

திருப்பூரில் குண்டடம் ஊராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தேர்தலில் நின்று அதில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சடையா பாளையம் கிராம ஊராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர்.

பெரியசாமி என்பவரும் அவரது மனைவி லஷ்மியும் மற்றும் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரனும் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் தேர்தல் முடிவில் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் 2147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரியசாமி 1986 வாக்குகள் பெற்றார். அவரின் மனைவி 147 வாக்குகள் பெற்றார். பெரியசாமியின் வெற்றிக்குத் தேவையான வாக்குகள் அவரது மனைவிக்கு சென்றுவிட்டன. ஒருவேளை அந்த வாக்குகள் அவருக்குக் கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற சூழல் இருந்தது.