திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (17:57 IST)

நாளை 3மணி நேரம் மின்தடை....

தமிழகத்தில் மின் பராமரிப்பு காரணமாக நாளையும் 3 மணிநேரம் மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக  மின்சார வாரியம், தமிழகம் முழுவதிலும் உள்ள மின் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாத காரணத்தால் குறிப்பிட்ட சில பகுதிகளில் தொரர் மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதற்குத் தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையில் அடுத்த 10 நாட்களுக்கு தீவிரப் பராமரிப்பு மேற்கொள்ள திட்டமிட்டு இதற்கான பணிகள் முழு வீசில் நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு  மின் தடை அறிவிக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு 3 நாட்களில் இணைப்பு வழங்க வேண்டுமென்று மின் வாரிய ஊழியர்களுக்கு மின்விநியோக இயக்குநர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழகத்தில் மின் பராமரிப்பு காரணமாக நாளையும் 3 மணிநேரம் மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின் தடை செய்யப்படுகிறது.., அந்தவகையில் நாளை( ஞாயிற்றுக்கிழமை) சில பராமரிப்பு காரணமாக பகுதிகளில் மின் தடை இருக்கும் எனக் கூறப்படுகிறது.