செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 மே 2022 (12:52 IST)

12 மாவட்டங்களில் கொள்ளை அடித்த 3 தம்பதிகள் கைது!

robery
12 மாவட்டங்களில் கொள்ளை அடித்த 3 தம்பதிகள் கைது!
12 மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை அடித்த தெலுங்கானாவை சேர்ந்த மூன்று தம்பதிகள் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர் கொள்ளை நடந்து வந்ததை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதியினர் இந்த கொள்ளை சம்பவத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து 40 பவுன் தங்கம் மற்றும் 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தெலுங்கானா மாநிலம் வாராங்கலைச் சேர்ந்த சூர்யா- பாரதி , மணி  - மீனா , விஜய்  - லட்சுமி ஆகிய மூன்று தம்பதிகள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்து கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டுக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.