திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (17:59 IST)

2nd ODI: வங்கதேசத்திற்கு எதிராக பேட்டிங்கில் திணறி வரும் இந்திய அணி!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி  சிறப்பாக விளையாடிய  நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக  நிர்ணயித்துள்ளது.
 

இதையடுத்து, பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் பேட்ஸ்மேங்கள் விராட் கோலி 5 ரன்களிலும், தவான் 8 ரன்களிலும், சுந்தர் 11 ரன்களிலும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.


10 ஓவர்களில் 39 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய இந்திய அணி, தற்போது,24.3 ஓவர்களில், 117 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

இன்னும் 25 ஓவர்களில் 155 ரன்கள்  வெற்றிக்குத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj