திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (11:26 IST)

மழைக்கு பின் மீண்டும் தொடங்கிய ஆட்டம்: முதல் பந்திலேயே தவான் அவுட்

ind vs newz
மழைக்கு பின் மீண்டும் தொடங்கிய ஆட்டம்: முதல் பந்திலேயே தவான் அவுட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
இந்த போட்டியில் 4.5 ஓவர்கள் முடிந்தபோது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து சற்றுமுன் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ஐந்தாவது ஓவரின் முதல் பந்திலேயே தவான் ஆட்டமிழந்தார் 
 
இதனை அடுத்து சற்று முன் வரை இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva