7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்? கவர்னர் ஆய்வுக்கு பதிலடியா?
இன்று மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் அவர்கள் கோவையில் ஐ.ஏ.எஸ், ஐ.பிஎஸ். அதிகாரிகளிடம் ஆய்வு செய்த ஒருசில மணி நேரங்களில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் இதோ:
1. கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்த ஏ.அருண், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
3. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா, கோவை மாநகரக் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. சிவில் பொதுவிநியோகம் மற்றும் தடுப்புப் பிரிவு சி.ஐ.டியாக இருந்த ஜி.வெங்கட்ராமன், சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக இருந்த தினகரன், சென்னை காவல்துறையின் ஸ்தாபன ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. இன்டர்கேடர் டிபுடேஸன் பிரிவு துணை ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா, சென்னைக் காவல் பயிற்சி கல்லூரி துணை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. உத்தரப்பிரதேசத்திலிருந்து பணிமாற்றத்தில் வரும் ஐ.பி.எஸ் அதிகாரியான அமனந்த் மான், சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்’
இந்த இடமாற்றம் வழக்கமான நடைமுறைதான் என்றும், கவர்னர் ஆய்வுக்கும் இந்த இடமாற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.