தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வார்டுகளாக மாறும் சென்னை திருமண மண்டபங்கள்
- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்....5 ராணுவ வீரர்கள் உயிர்தியாகம்...
- கோயம்பேடு சந்தையால் 131 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
- மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் முக்கிய தகவல்!
- கொரோனாவில் இருந்து 10,000-க்கும் மேற்பட்டோர் நலம் பெற்றுள்ளனர் - அமைச்சர் ஹர்ஸ்வர்தன் !
தமிழகத்தில் 266, சென்னையில் 203: கொரோனா பாதித்த எண்ணிக்கையால் அதிர்ச்சி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக அதிகரித்துள்ளது என்பதை சற்றுமுன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதும் சென்னையில் மொத்தம் 1458 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 38 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1,379 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையை அடுத்து கடலூரில் 9 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 6 பேர்களும் கோவையில் நால்வரும், அரியலூர், மதுரை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் தலா இருவரும் செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இன்று பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
