வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 3 மே 2020 (15:26 IST)

மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் முக்கிய தகவல்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டன் நிலையில். கொரொனா பாதிப்பு சரியானதும் படம் ரிலீசாகும் என  தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, படத்தைப் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும்,மாஸ்டர் படம் ஆன்லைனில் நேரடியாக ரிலீசாகும் என வதந்திகள் உருவான நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார், கூறியுள்ளதாவது:

மாஸ்டர் திரைப்படம் நேரட்கியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகாது. கொரொனா பாதிப்பு சரியான பிறகு தியேட்டர்களில் தான் ரிலீசாகும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.