1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (13:18 IST)

தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் 26 பேர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்க தொடங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் பத்திரிகையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பதால் ஏற்கனவே இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த சேனலில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தற்போது செய்யப்பட்டு வருகிறது.
 
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள 26 செய்தியாளர்களும் தற்போது அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த 26 பேர்களையும் சேர்த்தால் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எகிறும் என அஞ்சப்படுகிறது 
 
கொரோனா வைரஸ் தாக்கம் முடியும் வரை பத்திரிகையாளர்கள் மிகக் கவனத்துடன் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் சமூக நிலைகளை கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது