இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி தளத்தில் இன்று 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் - பொன்னேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள முழு விவரங்கள் இதோ:
Edited by Siva