புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (12:41 IST)

பைக் டாக்ஸி தடை விவகாரம்: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

bike taxi
பைக் டாக்ஸி தடை விவகாரம் குறித்து பரபரப்பான தகவல்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது
 
ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 
பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்து நல்ல முடிவெடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran