1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2023 (08:34 IST)

2021 ஆம் ஆண்டின் கேள்வித்தாள் மீண்டும் விநியோகம்.. மாணவர்கள் அதிர்ச்சி..!

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கேள்வித்தாளை மீண்டும் வழங்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கும் நிலையில் தற்போது  பருவ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதுநிலை கணிதவியல் தேர்வில் கடந்த 2021 ஆம் ஆண்டின் கேள்வித்தாள் அப்படியே மீண்டும் இந்த ஆண்டு வழங்கப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் கருத்து கூறிய போது  கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் மற்றும் அதன் முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகி வருவதாகவும் பழைய கேள்வித்தாள் மீண்டும் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் எதற்காக கேள்வி தாள் வடிவமைப்பு குழு என்று ஒன்று இருக்கிறது? அவர்களுக்கு எதற்காக சம்பளம் வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்  

கேள்வித்தாள் சர்ச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Edited by Siva